BREAKING NEWS ஈழத் தமிழ் இளைஞரை சிங்கள புலனாய்வு நேற்று(02) அடித்தே கொலை செய்துள்ளது

ஈழத் தமிழ் இளைஞரான விதுசனை(22) சிங்கள புலனாய்வுப் பொலிசார் அடித்தே கொலை செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நேற்றைய தினம்(02) இரவு 10.30 மணியளவில் சந்திரன் விதுஷன் என்ற 22 வயது இளைஞரை சிங்களப் பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர் மட்டக்களப்பு இருதயபுரத்தில் வசித்து வந்த நிலையில். இரவு 10.30 மணிக்கு நண்பர் ஒருவர் விதுஷனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறியுள்ளார். இதனால் விதுஷன் வீட்டை விட்டு வெளியே சென்றவேளை, அங்கே காத்து நின்ற சிங்கள புலனாய்வு பொலிசார் அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள்.

பின்னர் இன்று காலை(03) அவர் இறந்து விட்டதாக கூறி, விதுஷனின் உடலை பொலிஸ் நிலையத்தில் வைத்து வைத்தியரிடம் ஒப்படைத்துள்ளார்கள். விதுஷன் உடலில் பலத்த அடி காயங்கள் உள்ளதாக அவரது உடலைப் பார்த்த நபர்கள் பலர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு எத்தனை சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் தெரியவில்லை. இந்த சம்பவம் தான் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம். விதுஷனுக்கு என்ன நடந்தது என்ற விடையத்தை இலங்கை புலனாய்வுத் துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக வெளிநாட்டு தமிழர்கள், தமது நாட்டில் உள்ள அரசாங்கத்தின் வெளியுறவுத் துறைக்கு அறிவிப்பது நல்லது. இலங்கையில் இன்று வரை இனப்படு கொலை தொடர்கிறது என்பது இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.

Contact Us