இங்கிலாந்தின் கடற்கரையில் அரிய வகை உயிரினம்; நீங்களும் பார்க்கலாம்!

மின்கே திமிங்கலங்கள் வட அட்லாண்டிக் பசுபிக் கடலில் காணப்படும் அரிய வகை திமிங்கலங்கள். திமிங்கல இனங்களிலேயே மிகவும் சிறிய வகையைச் சேர்ந்தது. அதிகபட்சமாக 26 முதல் 29 அடி வரை நீளம் மட்டுமே இருக்கும். அந்த இனங்களில் இருக்கும் சில குட்டி திமிங்கலங்கள் இரைக்காக திசைமாறிச் செல்லும்.

மின்கே திமிங்கலங்கள் திசை மாறி கடைக்கரையில் திரிவதாக எண்ணற்ற செய்திகள் வெளிவரும். அந்தவரிசையில் டீசைட் கடற்கரையில் மின்கே திமிங்கலம் கரை ஒதுக்கியுள்ளது. உள்ளூர்வாசிகளில் ஒருவரான பியோனா ரோபோத்தம், கடந்த புதன்கிழமை கடற்கரை பகுதியில் நடைப்பயணம் செய்துள்ளார். அப்போது இறந்த மின்கே திமிங்கலத்தை கடற்கரையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்த தகவல்களை கூறியுள்ளார். உடனடியாக ஹம்பர் கடலோர காவல்படையினர் குழு சம்பவ இடத்திற்கு வருகை தந்து திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது பாலூட்டி இறந்துவிட்டதாகவும் அது ஒரு மின்கே திமிங்கிலம் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து பேசிய ஹம்பர் கோஸ்ட்கார்ட்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இந்த திமிங்கலம் பத்து அல்லது 12 மீட்டர் நீளம் கொண்டது என்றும் அது இறந்துவிட்டது” என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் இது தண்ணீருக்குள் சுமார் 40 மீட்டர் தொலைவில் இருந்தது என்றும் அவர் கூறினார்.

மறுபுறம் பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் மீட்பு குழுவினர் திமிங்கலத்தை ஆராய்ந்து சில அளவீடுகளைச் செய்து கொண்டிருந்தனர். மேலும் கடலோர காவல்படையினருடன் ஒரு மருத்துவருடன் சென்ற ஆய்வு குழு, திமிங்கலத்திற்கு ஏதேனும் காயங்கள் அல்லது நோய் இருக்கிறதா? என்று முழுமையாக ஆய்வு செய்தது.

விரிவான விசாரணையை நடத்துவதற்கு முன்பு திமிங்கலம் அதிகாரப்பூர்வமாக கடற்கரையில் இருந்து அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் உள்ளூர் மக்களைத் தொடர்புகொண்டு, இறந்த திமிங்கலத்தை கடற்கரையில் இருந்து அகற்றும் வரை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினர். மேலும் கடற்கரைக்கு அருகில் இறந்துபோன அல்லது உயிருடன் இருக்கும் இதுபோல ஏதேனும் ஒரு விலங்கைக் கண்டால், செட்டேசியன் ஸ்ட்ராண்டிங்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியில், ஒரு குறுகிய கால்வாய் பகுதியில் உள்ள உருளைகளுக்கு நடுவே மின்கே குட்டித் திமிங்கலம் சிக்கியது. இதனை பார்த்த உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்பிடி, அந்தப்பகுதிக்கு சென்ற லண்டன் துறைமுக அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் உருளைக்குள் சிக்கியிருக்கும் திமிங்கலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தேம்ஸ் நதியில் திமிங்கலம் இருக்கும் தகவலையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து திமிங்கலத்தை பார்க்க போட்டிப்போட்டனர். பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் ரெஸ்குவின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டான் ஜார்விஸ், சில நேரங்களில் இந்த வகை திமிங்கலங்கள் தற்செயலாக கரைக்கு வந்து சிக்கித் தவிப்பதாக விளக்கினார்.

Contact Us