கலையில் இருந்து டோவர் வந்த கள்ளப் படகில் டிக் டாக் வீடியோ விட்ட தமிழர் இவர் தான் !

தற்போது பிரித்தானியாவுக்கு பெரும் தலையிடியாக இருப்பது, பிரான்சில் இருந்து, களவாக டோவர் வரும் அகதிகள் படகு தான். 6 நாட்களில் மட்டும் 1,200 பேர் இவ்வாறு வந்து விட்டார்கள். இதனால் பிரித்தானிய கடல் படையை களமிறக்கியுள்ளார், பிரீத்தி பட்டேல். இன் நிலையில். பிரான்சின் கலை கடற்கரையில் இருந்து, டோவர் நோக்கி கள்ளமாக படகில் வரும் வேளை சிலர் டிக்-டாக் வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒரு தமிழரும் அடங்குகிறார். அவர் பெயர் பிரவீன் குமார். இவர் அந்த டிக் டாக் வீடியோவில் கைகளை அசைத்து V என்று காட்டுகிறார்… ஆதாவது ..

வெற்றியாம்… இப்படி டிக் டாக் வீடியோ எல்லாம் விட்டு, மேலும் ஆசையை தூண்டுகிறார்கள். யாருக்கு தெரியுமா ? கலையில் தற்போது தங்கி இருக்கும் அகதிகளுக்கு. அங்கே சுமார் 60,000 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் வரையான அகதிகள் பல இடங்களில் கூடாரம் இட்டு தங்கியுள்ளார்கள். ஏன் எனில் பிரித்தானியாவுக்குள் வரத்தான். இந்த V சைகை காட்டியவர் தமிழர் என்று அறியப்படுகிறது. ஆனால் இந்தியாவா , இலங்கையா இல்லை மலேசியாவா என்பது தான் தெரியவில்லை.

Contact Us