Friends போல யாரு மச்சான் – நண்பனுக்காக தானும் தற்கொலை செய்த 17 வயது பையன் !

நண்பனை போல வேறு யாரும் இருக்க முடியாது என்பார்கள். அது உண்மை தான் என்று உணர்த்தியுள்ளார் பிரித்தானியாவில் ஒரு 17 வயதுப் இளைஞன். கடந்த மே மாதம் 31ம் திகதி, அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், மேல் மாடியில் இருந்து கிளேட்டன் என்னும் 18 வயது இளைஞரின் அப்பா தவறி விழுந்து விட்டார். அப்பாவை காப்பாற்ற ஓடிய கிளேட்டனும் சறுக்கி விழுந்ததில் இருவரும் உயிரிழந்தார்கள். இந்த சோகம் ஆற முன்னரே, கிளேட்டனின் மிக நெருங்கிய நண்பரான கலம்(17) தற்கொலை செய்துகொண்டார். இது இரு குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…

தற்போது இந்தச் சம்பவத்தால், இரண்டு குடும்பத்திலும் 3 பேர் இறந்துள்ளார்கள். நண்பன் இறந்த சோகம் தாங்க முடியாமல் தான் கலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது போக நண்பனின் அப்பா கூட கலத்தை தனது நண்பர் போலவே பழகுவது வழக்கமாம். இதனால் நட்புக்காக இந்த தற்கொலை நடந்துள்ளது.

 

Contact Us