அடுத்த பிரித்தானிய அரசன் யார் தெரியுமா ? எந்த வரிசையில் ஹரி இருக்கிறார் தெரியுமா ?

தமிழர்களின் மரபை ஒத்த விடையத்தையே பிரித்தானிய ராஜ குடும்பமும் கையாண்டு வருகிறது. வீட்டில் பிறக்கும் மூத்த ஆண் பிள்ளைக்கே உரிமை அதிகம். அது போக இளையவராக இருந்தாலும் அதில் ஆணாக இருந்தால் அவருக்கு உரிமை அதிகம் உள்ளது. அந்த வகையில், பிரித்தானிய மகாராணி தனது பதவியை துறக்க நேர்ந்தால், அடுத்த அரசராக அவரது மகன் சார்ளஸ் முடி சூடுவார். அவர் அதனை ஏற்க்க மறுத்தால் அவரது மூத்த பிள்ளையான இளவரசர் வில்லியத்திற்கு அரசர் பதவி கிட்டும். அந்த வரிசையில் பார்த்தால் , இளவரசர் ஹரி 6ம் இடத்தில் தான் இருக்கிறார். இதனால் அவரால் என்றுமே பிரித்தானிய அரசராக வாய்ப்பே இல்லை… இது இவ்வாறு இருக்க…

மேகான் மற்றும் ஹரி தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று நேற்று(06) பிறந்துள்ளது. அதற்கு லில்லிபெத் என்று பெயர் சூட்ட உள்ளதாக கூறப்படுகிறது. தனது அம்மா டயானாவையும், மகாராணியாரையும் பெருமைப் படுத்தும் விதத்தில் இந்த பெயரை தாம் தெரிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் ஹரி. பிரித்தானிய மகாராணியாரை இள வயதில் வீட்டில் அனைவரும் லில்லி பெத் என்று தான் அழைப்பார்களாம். அது போல டயானாவுக்கு லில்லி மலர்கள் நன்றாக பிடிக்குமாம். இதனால் இந்த பெயரை வைக்கலாம் என்று கருதுகிறார் ஹரி.

அரச குடும்பத்தையே TV நிகழ்ச்சி ஊடாக மிகவும் கேவலப்படுத்தி விட்டு தற்போது இப்படி ஒரு பெயரை அவர் வைக்க முனைவதை பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.

Contact Us