கொரோனா இந்தியால இருந்து போகணும்னா…’ நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு..!

சர்ச்சைக்கு பெயர்போன நித்தியானந்தா கொரோனாவிற்கு குறிப்பார்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nithiyananda says Corona will go if he sets foot in India

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஆண் சீடர் பாலியல் புகார், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாகி, வீடியோ கான்பெரென்ஸ்ஸில் மட்டும் வந்து தலைக்காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இவரின் வீடியோ அடிக்கடி இணையத்தில் வைரலாகும், அதுபோல சமீபத்திய வீடியோ ஒன்றில் தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் கொரோனா போகும் என கூறியுள்ளார்.

இதனால் நித்தி அநேகமாக இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் ஒன்றையோ அல்லது நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ள ஆளில்லாத தீவுகளில் ஒன்றையோ அவர் விலைக்கோ அல்லது நீண்ட நாள் குத்தகைக்கோ எடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்போது நித்தியானந்தா தன் புதிய வேஷத்தில், புருவத்தை அடர்த்தியாக வரைந்துக்கொண்டு கண்களில் கலர் லென்சுடன் கண்களை சிமிட்டி சிமிட்டி பேசி, மகமாயி, மீனாட்சி, காளி அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் பெயரில் குறி கேட்கும் தனது சீடர்களுக்கு குறி சொல்லி வருகின்றார்.

Nithiyananda says Corona will go if he sets foot in India

அப்போது ஒருவர் கொரோனா எப்போது இந்தியாவை விட்டு போகும் எனக் கேட்டதற்கு, ‘தன் உடலில் புகுந்துள்ள அம்மன் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் தான் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்’ என சூசகமாக கூறியுள்ளார்.

நித்தியானந்தாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் கொரோனாவை அழிக்க வருவரா நித்தியானந்தா என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Contact Us