பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு ஆசை காட்டிய பிரபலம்.. ஆள விடுங்க சாமி என ஓட்டம் பிடித்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூமிகா. இவருக்கு முதல்படமே விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்சினிமாவில் வெற்றி நாயகியாக அறிமுகமானார்.   நடிகைகள் பொறுத்தவரை எப்போதும் ஒரு காலம் வரைக்கும் தான் அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் அப்படி பூமிகாவிற்கு ஒரு காலத்தில் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன அதன்மூலம் பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

பின்பு காலப்போக்கில் அவருக்கு படவாய்ப்புகள் சற்று குறைய சினிமாவை விட்டு விலகி தொழில் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதிலும் வெற்றி கண்ட பூமிகா அதன்பிறகு ஒரு சில இயக்குனர்கள் மூலம் சினிமாவில் குணச்சித்திர நாயகியாக ரீஎன்ட்ரி கொடுத்தார்.

பூமிகாவை ஹிந்தி பிக் பாஸ் 15 ஆவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் அதன்மூலம் உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என பிரபலம் ஒருவர் தொடர்ந்து கூறியுள்ளார். அதற்கு பூமிகா எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விருப்பமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பூமிகா தன்னை நட்சத்திர போட்டியாளராக கலந்து கொள்ளவும் கூறினர்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு பிக் பாஸ் 1,2,3நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நிறைய முறை அழைத்ததாகவும். என்னை பொருத்தவரை கேமரா முன் நடிப்பதுதான் என்னுடைய வேலை தவிர கேமரா முன் வாழ்வது என்னுடைய வேலை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

Contact Us