யூ டோண்ட் வொரி”…! ‘இனிமே நான் பார்த்துக்கறேன்’…! நர்ஸ் போலவே அசத்தலாக வந்திருக்கும் புதிய ரோபோ…!

2019 முதல் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அலை முடிந்து தற்போது இரண்டாம் அலை வெகுவாக பாதித்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் அதிகப்படியான பணிச்சுமை அடைகின்றனர். கொரோனா காலம் ஆரம்பித்த முதலே மருத்துவருக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் தான் அதிக வேலை இருந்தது. நிமிடத்துக்கு நிமிடம் வரும் நோயாளிகளுக்கு உடனே நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

New robot designed to reduce the work load of nusrses

இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகினர். இதில் பலர் மரணமடைந்தனர். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த ஹாங்காங்கை சேர்ந்த குழு ஒன்று முதியவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்த பட்டவர்களை தொடர்புகொள்ளும் வகையில் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

செவிலியர் போல நீல நிற உடை அணிந்து செவிலியர் போலவே வேலை செய்யும் இந்த ரோபோவிற்கு ஆசிய அம்சங்கள் ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் மார்பு பகுதியில் ஒரு கருவியை பொருத்தி உள்ளர்கள் அந்த கருவி மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதிக்கலாம் மற்றும் இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சனைகளை கண்டறியலாம்.

இதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் பணி சுமையை குறைக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கபட்டுள்ளது என்று ரோபோட்டின் நிறுவனர் டேவிட் ஹான்சன் தெரிவித்துள்ளார்.

Contact Us