லண்டனில் 42,000 ஆயிரம் பேருக்கு இந்திய கொரோனா- 3மடங்காக உயர்ந்துள்ளதாக அறிவிப்பு !

லண்டனில் கடந்த 3 வாரங்களில் 42,000 ஆயிரம் பேரை இந்திய கொரோனா தாக்கியுள்ளது என்றும். அவர்கள் இன்றுவரை நோய் வாய்ப்பட்டு இருப்பதாகவும், தடுப்பூசி போடும் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் சிகாவி மேலும் தெரிவிக்கையில், வெறும் 12,000 ஆயிரமாக இருந்த இந்திய உருமாறிய கொரோனா தொற்று, கடந்த 10 நாட்களில் 3 மடங்காக அதிகரித்துள்ளது என்று அச்சம் வெளியிட்டுள்ளார். இதன் காரணத்தால் ஜூன் 21 சுதந்திர தினத்தை பிற்போடுமாறு அவர் பிரித்தானிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால்…

தரவுகளை வைத்தே நாம் பார்கிறோம் என்று பொறிஸ் ஜோன்சன் சற்று முன்னர் தெரிவித்து, இந்த வேண்டு கோளை நிராகரித்து விட்டார். இதனால் பொறிஸ் ஜோன்சன் அறிவித்தல் பிரகாரம் ஜூன் 21 அனைத்து தடைகளும் நீக்கப்படுகிறது. ஆனால் முக கவசம் மட்டும் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Contact Us