காதலனை மறக்க முடியவில்லை.. கணவனுக்கு குட் பை சொல்லிவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்!

பீகாரை சேர்ந்த இளம்பெண் கட்டாய திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் கணவனை பிரிந்து காதலனுடன் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் சுல்தான்காஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அனு குமாரி. இவருக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஆஷூ குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் அனுகுமாரியின் பெற்றோருக்கும் தெரியவந்ததுள்ளது. அனுகுமாரியின் காதலுக்கு பெற்றோர்கள் தடையாக இருந்துள்ளனர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. அனு குமாரியின் காதல் விவகாரம் தெரியவந்தையடுத்து அவருக்கு மணமகன் தேடும் படலம் நடந்துள்ளது.

அனுகுமாரியோ காதலனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளையும் விரைவாக செய்துள்ளனர். இந்நிலையில் கிரான்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு நபருக்கும் அனுகுமாரிக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பெற்றோரை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாததால் விருப்பமே இல்லாமல் திருமணத்துக்கு உடன்பட்டுள்ளார்.

காதலனின் நினைவுகளால் கடந்த இரண்டு மாதங்களாக தவித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதற்கான நேரத்திற்காக காத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அனு குமாரி தன் காதலனை சந்தித்துள்ளார். சுல்தான்கஞ்ச் ரயில்நிலையத்துக்கு வந்தவர்கள் பெங்களூருவுக்கு செல்ல தயார் நிலையில் இருந்த ரயிலில் ஏறியுள்ளனர். ரயிலிலே திருமணம் செய்துக்கொண்டனர். அனுவின் நெற்றியில் குங்குமம் வைத்து அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

Contact Us