விடுதலைப் புலிகளின் தலைவர் கடவுள் கொள்கை உடையவர்; சிங்களவன் வெளியிட்ட தகவல்!

தமிழீழ விடுதலைகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஷரியத் சட்டத்தை விட மேலான சட்டத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தார் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ’நந்திக்கடலுக்கான பாதை ‘ எனும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்த நிலையில், ’நந்திக்கடலுக்கான பாதை ‘ என்ற புத்தகத்தை கமல் குணரத்ன 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதியிருந்தார். அந்த புத்தகம் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்,குறித்த புத்தக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி கமல் குணரத்ன தெரிவித்துள்ள விடயங்களை தற்போது இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

குறித்த புத்தகத்தில், “பிரபாகரன் அவர்கள் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தைப் பேணியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த ஒரு சான்றுமே கிடையாது. அவர், ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார்.

Contact Us