ஓவர் உடல் பயிற்ச்சி உடம்பிற்கு ஆகாது- 29 வயதில் இயதம் நின்ற வீரார்- ஹீரோ போல காப்பாற்றிய நண்பர் !

யூரோ 2020 உதை பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது யாவரும் அறிந்த விடையம்.  நேற்றைய தினம் டென்மார்க் நாட்டு உதைபந்தாட்ட வீரர்கள், பின்லாந்தோடு விளையாடினார்கள். அப்போது டென்மார் வீரர் கிருஸ்டியன் எரிக்சன்(29) திடீரென கீழே விழுந்து, சுய நினைவை இழந்தார். அவரது நாடி துடிக்கவில்லை. இதயம் அப்படியே நின்றுவிட்டது. ஆனால் டென்மார்க் கேப்டன் சிமன் கஜேர், உடனே அருகில் சென்று, கிருஸ்டியன் நெஞ்சில் அழுத்தி, செயற்கை சுவாசத்தை கொடுத்து முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்… எல்லா டென்மார்க் வீரர்களும் கிருஸ்டியன் இறந்து விட்டதாக கருதினார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து திகைத்து போய் நின்றார்கள்… உடனே …

அங்கு வந்த மருத்துவர்கள், முதல் உதவி கொடுத்துக் கொண்டு அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். தற்போது கிருஸ்டியனுக்கு சுய நினைவு திரும்பி விட்டது. அவர் விரைவாக குணமடைந்து வருவதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளதோடு. அவர் விரைவில் உதைபந்தாட்ட விளையாட்டை தொடருவார் என்றும் தெரிவித்துள்ளார்கள். கேப்டன் என்ற முறையிலும், சக நண்பர் என்ற முறையிலும் மிகவும் துணிச்சலாக செயல்பட்டுள்ளார்,  சிமன் கஜேர். அவர் மட்டும் முதல் உதவி கொடுக்கவில்லை என்றால் இன்று கிருஸ்டியன் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அவர் உண்மையில் ஒரு ஹீரோ தான். அது போக வெறும் 29 வயதே ஆகும், மற்றும் நல்ல உடல் நிலையில் இருந்த கிருஸ்டியன் இதயம் ஏன் நின்றது என்பது 2வது கேள்வி.

அதிக உடல் பயிற்ச்சி, திடீரென அதாவது முன்னர் செய்யாத கடுமையான வேலையை செய்வது உடலுக்கு ஆகாது. திடீரென அதிகரிக்கும் இதயத் துடிப்பு மிகவும் ஆபத்தான ஒரு விடையம். ஒரு அளவுக்கு மட்டும் தான் இதய துடிப்பு செல்ல முடியும். அந்த அளவை தாண்டி அதிகமாக இதயத்தால் துடிக்க முடியாது. அந்த நிலை ஏற்பட்டால் இதயம் திடீரென நின்று விடும். அதற்கு முன்பாக தலைச் சுற்று, தலை வலி, வாந்தி எடுத்தல் போன்ற உணர்வுகள் இருக்கும். அதனை நாம், அசண்டையீனம் செய்யக் கூடாது. பொதுவாக வேர்க் அவுட் செய்யும் போது கூட மெதுவாக ஆரம்பிப்பது நல்லது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் பயிற்ச்சியை அதிகரிக்க வேண்டும். திடீரென கடுமையாக உடல் பயிற்ச்சி செய்வது, என்றுமே ஆபத்து தான்.

அதுவும் இந்த லாக் டவுன் கால கட்டத்தில், பல விளையாட்டு வீரர்கள் பயிற்ச்சியை மறந்து வீட்டில் இருந்து பழகி விட்டார்கள். திடீரென விளையாட ஆரம்பிக்கும் போது, இது போன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்ல, யாருக்கும் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

 

 

 

 

 

Contact Us