குறுக்கு வழியால் இறங்க முயற்ச்சி- 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இறந்த அம்மா- மகள் பார்த்துக் கொண்டு இருக்க…

பிரித்தானியாவில் தற்போது கோடை காலம் என்பதனால், பலர் கடல் கரைக்கு படை எடுத்து வருகிறார்கள். இன் நிலையில் டோர்டல்-டோ என்னும் கடல் கரைக்கு அம்மாவும் மகளுமாக சென்றுள்ளார்கள். கடல் கரைக்கு அருகே பெரும் சுண்ணாம்பு கல் பாறைகள் உள்ளது. அது வழியாக இறங்கியே கீழே உள்ள கடல் கரைக்கு செல்ல முடியும். இன் நிலையில் கீழே இறங்க என பொதுவான ஒரு பாதுகாப்பான பாதை உள்ளது. அதனை விடுத்து அவரசமாக கீழே இறங்க மிகவும் ஆபத்தான பாதை தெரிவு செய்துள்ளார் ஜபீன் என்னும் இந்தப் பெண். அவரது மகள் ஏற்கனவே வேகமாக கீழே இறங்கி விட்டதால்…

நான் வருகிறேன் என்று சத்தமாக கூச்சலிட்டுக் கொண்டு அவர் சென்ற நிலையில். திடீரென 100 அடி பள்ளத்தில் அதுவும் கற்கள் மேல் விழுந்து விட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இந்தக் காட்சிகளை அவரது மகள் மட்டும் அல்ல, பல நூறுக் கணக்கானவர்கல் பார்த்துள்ளார்கள். ஆனால் எவராலும் உதவி செய்ய முடியவில்லை.

Contact Us