பிரிட்டனில் ஒரு நாளைக்கு 11,000 ஆயிரம் பேருக்கு இந்திய கொரோனா தொற்றுகிறது !

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 11,000 ஆயிரம் பேருக்கு இந்திய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும். இதனால் வைத்தியசாலை செல்லும் நபர்களின் எண்ணிக்கை 50% சத விகிதத்தால் அதிகரித்துள்ளது என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் போல, சடுதியாக மேலே செல்வதாக கூறப்படுகிறது. இன் நிலை நீடித்தால், நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் வரைக்கும் தொற்றும் வாய்ப்பு உள்ளது என்று முன்னரே விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தார்கள். தற்போது இது தான் நடக்க ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது பல கட்டுப்பாடுகள் தளர்வடைந்துள்ள நிலையில்…

இவ்வாறு இந்திய உரு மாறிய கொரோனா பரவலாக தொற்றி வருகிறது. குறித்த தொற்று இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதாகவும். குறிப்பாக தடுப்பூசி எடுத்த நபர்களை தாக்கும் விகிதம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Contact Us