சீனாவின் AI(artificial intelligence) விமானம்: தனது போட்டியாளரின் திறனை உடனே பழகி அவர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது

சீனா ஆயுதங்களில் மட்டும் அல்ல, தொழில் நுட்ப்பத்திலும் படு வேகமாக முன்னேறி வருகிறது. மனிதர்களால் இயக்கப்படும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) பற்றி நாம் அறிந்து இருப்போம். ஆனால் சீனா தயாரித்துள்ள ஆட்டிபிஃஷல் இன்டலியன்ட் என்ற (AI) விமானத்தில். மனித மூளையை ஒத்த கம்பியூட்டர் உள்ளது. மனிதர்களின் எந்த ஒரு தலையீடும் இன்றி இந்த போர் விமானங்கள், தமது சொந்த புத்தியில் பறக்க வல்லதோடு. தேவைப்படும் பட்சத்தில் எதிரி நாட்டு நிலைகளை, மற்றும் விமானங்களை கூட தாக்க வல்லவையாம். போதக் குறைக்கு அவை பறக்கும் போது, எதிரி நாட்டு விமானம் பறக்கும் விதம், இல்லையென்றால் சக விமானி பறக்கும் விதம். அவர் பாவிக்கும் யுக்திகளையும் நேரடியாக கண்காணித்து அதனை உடனே பதிவு செய்து விடும். இதனூடாக அது தனது திறமையை உடனுக்கு உடன் மேம்படுத்த வல்லது. இவ்வாறு இது பயிற்சி பறப்பில் இருந்தவேளை…

அருகில் விமானியால்(மனிதரால்) இயக்கப்பட்ட போர் விமானம் ஒன்றை பார்த்து, அந்த யுக்தியை உடனே படித்து தானும் அது போல செயல்பட்டு காட்டியுள்ளதோடு. குறித்த விமானி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் விமானத்தையும் தாக்கியுள்ளது. இந்த செய்தியை பல நாட்களாக சீன வெளியிடவில்லை. தற்போது சக விமானி அல்லது தங்கள் சொந்த நாட்டு விமானங்களை எந்த நிலையிலும் தாக்க கூடாது என்ற கட்டுப்பாடு அடங்கிய புரோகிராமை, பதிவேற்றி வருகிறது சீனா. Source : China’s AI fighter pilots are ‘better than humans’ and have DEFEATED them in test flights.

இந்த AIவிமானங்கள் மனித விமானிகளை விட பல மடங்கு திறமை மிக்கதாக உள்ளது என்பது ஆச்சரியமான விடையம். அதிலும் மிக மிக ஆபத்தான விடையமும் கூட.

Contact Us