ஒரே படத்தில் 20 கோடி லாபம்.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் காட்டில் பண மழை தான்!

தற்போது உள்ள காலகட்டத்தில் தியேட்டர்களில் படங்கள் வெளிவருவது என்பது சாத்தியமில்லை  என்பதால் லேடி சூப்பர் ஸ்டார் நடித்த OTT-யில் வெளிவர காத்துக் கொண்டிருக்க திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தை அதிக தொகைக்கு OTT தளத்தில் விற்று விட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. அவள் படத்தை இயக்கிய மலிந்த் ராவ் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கான மொத்த பட்ஜெட் என்று பார்த்தால் 5 கோடியாம். இதில் நயன்தாராவின் சம்பளம் இல்லாமல் வரும் ஜூலை 9-ஆம் தேதி நெற்றிக்கண் திரைப்படம் OTT தளத்தில் வெளிவரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இது ஒருபுறமிருக்க நயன்தாராவின் படங்களிலேயே இந்தப் படம் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாம். அதாவது கிட்டத்தட்ட 25 கோடிக்கு கொடுத்து உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது படம் வெளி வருவதற்கு முன்னதாகவே கிட்டத்தட்ட 20 கோடி வரை லாபம் ஈட்டி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

த்ரில்லர் கலந்த இந்த படத்தில் நயன்தாரா கண் தெரியாதவர் போல் நடித்து உள்ளார் என்பது இன்னமும் சிறப்பு அம்சம், எது எப்படியோ தியேட்டர் திறக்கும் வரை ரசிகர்களுக்கு OTT தளத்தின் மூலம் தான் விருந்து வைக்க முடியும்.

Contact Us