வெளிய சொன்னீங்க.. அம்மாவ அடிச்சே கொன்னுடுவேன்’ – தந்தையே மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

தந்தையே மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 42 வயது நபர் தான் பெற்ற பிள்ளைகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தந்தைக்கு பயந்து இரண்டு வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த மகள்கள் தற்போது நடந்தவற்றை தனது தாயிடம் கூறி அழுதுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது இருமகள்களையும் காவல்நிலையம் அழைத்து சென்று கணவருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், குடும்ப சண்டை காரணமாக கணவன் வீட்டில் இருந்து அந்தப்பெண் வெளியேறிய நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாங்கள் அனுபவித்து வந்த கொடூரத்தை மகள்கள் கூறியுள்ளனர். ஜூன் 2-ம் தேதி காலையில் கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உணவில் காரம் குறைவாக இருப்பதாக கூறி மனைவியை அந்த நபர் அடித்துள்ளனர். வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த பெண் இரண்டு மகள்கள் மற்றும் மகனை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்குதான் இரண்டு பெண்களும் நடந்ததை கூறியுள்ளனர். இதில் ஒருவர் மைனர் பெண். மே 12-ம் தேதியில் இருந்து தந்தை தன்னிடம் தவறாக நடப்பதாக மைனர் பெண் கூறியுள்ளார். இந்த துன்பத்தை கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்து வருகிறேன் என மூத்த மகள் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அந்தபெண் அதிர்ச்சியடைந்துள்ளார். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அப்பா அடிப்பார். பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியில் சொன்னால் அம்மாவை அடித்தே கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அந்த நபர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி என்பதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Contact Us