கருங்கடலில் ரஷ்யா பிரிடன் கப்பல் செல்லும் பாதையில் குண்டை போட்டது. பெரும் பதற்றம் ஆரம்பம் !

ரஷ்யா தற்போது பிரித்தானியா மீது குறிவைக்க ஆரம்பித்துள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. நேற்றைய தினம் கருங்கடலில் பிரித்தானியாவின் நாசகார போர் கப்பல் சென்று கொண்டு இருந்த பாதக்கு சில மைல்கள் தொலைவுக்கு முன்னால் குண்டு ஒன்றை ரஷ்ய விமானம் போட்டுள்ளது. இதனை அடுத்து அது வெடித்துச் சிதறிய நிலையில், பிரித்தானிய போர் கப்பல், ரஷ்ய விமானத்தை தாக்கும் ஆயத்தங்களை செய்ய முற்பட்டார்கள். இதேவேளை ரஷ்ய போர் விமானங்கள் பிரிட்டன் கப்பலுக்கு மிக மிக அருகாமையில் சென்று மேலும் வெறுப்பேத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

இதனை அடுத்து பிரித்தானிய கட்டளைத்தளத்தோடு போர் கப்பல் தொடர்புகளை மேற்கொண்டு நடந்த நிகழ்வை அறிவித்துள்ளார்கள். ஆனால் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவை கேட்ட வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ரஷ்யா பதில் கூறியுள்ளதோடு. முற்றாக அனைத்தையும் நிராகரித்துள்ளது.

Contact Us