11 போலீசார் கொன்று குவிக்கப்பட்டதால் பதற்றம்; நடந்தது என்ன?

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இந்த நாட்டில் 2015-ம் ஆண்டில் இருந்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதுவரை இத்தகைய தாக்குதல்களில் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அங்குள்ள சோல்ஹான் கிராமத்தில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 138 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் புர்கினோ பாசோவின் வட பகுதியில் யிர்கோ என்ற நகரத்தில் நிவாரணப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதில் 11 போலீசார் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காணாமல் போய்விட்டதாகவும் புர்கினோ பாசா அரசு நேற்றுமுன்தினம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் இந்ததாக்குதலை நடத்தி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Contact Us