கிட்ட வந்தால் நிச்சயம் அடிப்போம்: கப்பல் தாண்டு விடும் என்கிறார் புட்டின்: பிரிட்டன் HMS டிஃபெண்டர்

பிரித்தானியாவின் HMS டிஃபெண்டர் என்னும் போர் கப்பல் கரும் கடலில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரீமியா என்னும் பகுதிக்கு அருகாமையில் பிரித்தானியாவின் போர் கப்பல் HMS டிஃபெண்டர் நிற்கிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா தனது போர் விமானங்களை அனுப்பி, அந்தப் பகுதியில் உள்ள கடலில் வைப்பர் என்ற ஏவுகணைக் குண்டுகளை போட்டுள்ளது. அது சில மைல் தொலைவில் விழுந்து வெடித்துள்ளது. குறித்த வைப்பர் என்ற ஏவுகணை நீரில் பல மைல்கள் நீந்திச் சென்று தனது இலக்கை தாக்க வல்லவை.

இன் நிலையில் பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. கிரீமியா என்ற பெரும் நிலப்பரப்பை எப்படி ரஷ்யா கைப்பற்றியதோ அதே போல தற்போது ஊக்கிரைன் நாட்டின் ஒரு நிலப்பரப்பையும் ரஷ்யா ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் அங்கே பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து அமெரிக்க போர் கப்பல் மற்றும் பிரித்தானிய போர் கப்பல்கள் கரும் கடலில் நிலை கொண்டுள்ளது. ஆனால் கிரீமியாவுக்கு மிக அருகாமையில்(30 மைல்) தொலைவில் குறித்த பிரித்தானிய நாசகார கப்பல் உள்ளது. இதுவே ரஷ்யா கடுப்பாக காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us