பிரிட்டன் மகாராணிக்கே பண பற்றாக்குறையா..? அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின், வருமானம் கடந்த 2019 -2020 ஆம் வருடத்தில், 20.2 மில்லியன் பவுண்டுகள் இருந்திருக்கிறது. தற்போது 2020- 2021 ஆம் வருடத்தில் 9.4 மில்லியன் பவுண்டுகள் தான் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணப் பற்றாக்குறை ஏற்பட கொரோனா பாதிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது.

அதாவது கொரோனா அச்சத்தால், அரண்மனையைக்காண சுற்றுலா பயணிகள் அவ்வளவாக வருவதில்லை. எனவே பொதுமக்கள் மட்டும் கொரோனாவால் வருவாய் இழக்கவில்லை, மகாராணியும் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் வருமானம் குறைந்துவிட்டதால், சேமிப்பில் வைத்திருந்த பணத்தை செலவிற்காக எடுக்க வேண்டிய நிலை அரச குடும்பத்தின் அரண்மனைக்கு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க கடந்த வரும் மகாராணியாரின் மொத்தச் செலவு, 87.5 மில்லியன் என்று அறியப்படுகிறது. இதில் ஒரு மரண சடங்கிற்கு இளவரசர் சார்ளஸ் சென்று வர 58,000 ஆயிரம் பவுண்டுகளை செலவு செய்துள்ளாராம். மேலும் ரயில் மூலமாக கேட் மிடில்டன் சென்று, சிலருக்கு நன்றி கூறி வர 48,000 ஆயிரம் பவுண்டுகள் முடிந்துள்ளதாம். மேலும் பக்கிங்ஹாம் மாளிகையில் 499 பேர் வேலை செய்கிறார்கள், அதுவும் முழு நேரமாக. 3.2 மில்லியன் பவுண்டுகள் மட்டும் மின்சாரம், கேஸ் போன்ற செலவுகளுக்கு செல்கிறதாம். இது இவ்வாறு இருக்க 700,000 ஆயிரம் பவுண்டுகளை செலவு செய்திருக்கிறார்கள், வெறும் அச்சுபதிப்புக்கு மாத்திரம். இப்படி மகாராணியாரின் செலவுகள் நீண்டு கொண்டு செல்கிறது. மகாராணியாரின் வருவாயை விட செலவு, பன் மடங்காக உள்ளது. துண்டு விழும் தொகையை வழமையாக பிரித்தானிய அரசு தான் கட்டி வருகிறது.

 

Contact Us