என்ன காரணம் தெரியல ….? 15 மாதங்களுக்குப் பிறகு நடந்த தீடீர் சந்திப்பு ….!!!

கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பிரிட்டனிலும் இதனுடைய தாக்கம் தீவிரமாக பரவி வந்த  நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில்  15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணி எலிசபெத்தை காண  பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்றுள்ளார்.

இதன்பிறகு அரண்மனைக்கு வருகை தந்த  பிரதமரை மகாராணி வரவேற்றார். இருவருடைய சந்திப்புக்கான  காரணம் குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. அத்துடன்  அரசாங்க விஷயங்கள் குறித்த முக்கிய சந்திப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக இந்த மாத துவக்கத்தில் நடந்த Cornwall-ல் உலக தலைவர்கள் கலந்து கொண்ட G7 உச்சி மாநாட்டிற்கு பிறகு மீண்டும் இவர்கள்  இருவரின் சந்திப்பும் நடைபெற்றது .

Contact Us