துமிந்த விடுதலையா ? கொழும்பு அமெரிக்க தூதுவராலயம் கடும் கண்டனம்- இதனை ஏற்க்க முடியாது !

இலங்கையின் உச்ச நீதிமன்றம் துமிந்த சில்வா கொலையாளி என்று, தனது தீர்ப்பை 2018ம் ஆண்டு வழங்கிய நிலையில். அதனை மீறி ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு கொடுத்த விடையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். இலங்கையில் சட்டம் ஒழுங்கு எந்த அளவு சீராக செயல்படவில்லை என்பதனை இது எடுத்துக் காட்டுகிறது என்றும் மறைமுகமாக சாடியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர். இவர் ரிவீட்டரில் விட்ட பதிவு தற்போது உலகளாவிய ரீதியில் வைரலாகி வருகிறது. துமிந்த சில்வா என்ற தனது நண்பர் ஒருவரை விடுவிக்க, கோட்டபாய 17 தமிழர்களையும் விடுவித்து. அவர்களோடு 80க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கள் பலரையும் விடுதலை செய்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க பஞ்சப்பட்ட நாடான வங்க தேசத்திடம் இருந்து கூட, 200 மில்லியன் டாலர்களை இலங்கை கடனாக வாங்கியுள்ளது. வங்க தேசம் கூட முன்னேறியுள்ள நிலையில், இலங்கை பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் கோட்டபாயவின் திறமை இன்மையே. அவர் ஒரு ராணுவ தளபதி. அவரால் நாட்டை ஆள முடியாது என்பது எப்போது தான் இந்த சிங்களவர்களுக்கு புரியும் என்பது தெரியவில்லை.

Contact Us