பசிலுக்காக தியாகம் செய்வதாக நினைத்து நாசமாகவுள்ள 4 எம்.பிக்கள் – வெளிவந்த ரகசிய தகவல்!

ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றம் பிரவேசிப்பதற்காக தங்களது ஆசனங்களை வழங்க அக்கட்சியின் 4 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவிருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, மர்ஜான் பலீல் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொள்ளக்கூடும் என ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Contact Us