மனைவி நடத்தை மீது சந்தேகம்…. 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவர்; தமிழர் பகுதியில் பரபரப்பு!

தூத்துக்குடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் மாலா தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மகளுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சிப்காட் பகுதியில், ரவி இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் தொழில் செய்து வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக சூசை என்பவர், ரவியின் குடும்ப உறுப்பினரைப் போல் அவர் வீட்டில் உள்ளவர்களிடம் நெருக்கமாக பழகிவந்துள்ளார்.

மேலும் ரவி மகளின் திருமண செலவுகளையும் இவரே ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சனிக்கிழமை அன்று வீட்டில் மனைவி மாலா மற்றும் சூசை ஆகியோர் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த ரவி, இருசக்கர வாகனங்களுக்கு வர்ணம் பூச பயன்படுத்தப்படும் ஆசிட்டை, சூசை மற்றும் மாலா முகத்தில் வீசியுள்ளார்.

அந்த நேரம் பார்த்து அங்குவந்த சூசையின் மகன் கெர்பின் மீதும் ரவி ஆசிட்டை வீசியுள்ளார். இதில் மூவரும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள ரவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Contact Us