பாடி நல்ல ‘ஃபிட்டா’ இருக்கணும்…’ ‘ஒரு நல்ல பிஸ்னஸ், ஒரு பங்களா…’ வயசு ‘இதுக்குள்ள’ தான் இருக்கணும்…! ‘வைரலான மணமகன் தேவை விளம்பரம்…’ – கடைசியில் தெரிய வந்த அதிரடி டிவிஸ்ட்…!

ஆங்கில நாளிதழ் ஒன்றில் மணமகன் தேவை என்ற விளம்பரத்தில் வந்த விவரங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

An advertisement English newspaper groom has gone viral

ஆங்கில நாளிதழ் ஒன்றில் மணமகன் தேவை என்ற விளம்பரத்தில் ‘பெண்ணியவாதியான, தலைமுடியை குறைவாக வெட்டி, மேல் காதில் தோடு போட்ட 30 வயதான, நன்று படித்து தற்போது முதலாளித்துவத்திற்கு எதிராக இருக்கும் பெண்ணிற்கு மணமகன் தேவை, மணமகன் 25-28 வயதிற்குள் இருக்க வேண்டும். பார்க்க ஹேண்ட்சமாக, நல்ல உடற்கட்டுடனும், ஒரு நல்ல பிஸ்னஸ் மற்றும் பங்களாவுடன் குறைந்தபட்சம் 20 ஏக்கர் நிலம் உள்ள ஆள் தேவை. கண்டிப்பாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும்’ என குறிப்பிடுள்ளார்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலர் இது குறித்து எதிர்மறையான பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, பெண்ணிற்கு வயது 30 ஆனால் 25-28 வயதுடைய ஒரு ஆண் வேண்டும் என விரும்புகிறார்’ என்பதால் அவர் ஒரு திமிர் பிடித்தவர் என்றும், சிலர் ‘உங்கள் சொந்த பணத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டும்’ என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த செய்தி குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்த பத்திரிகை ஒன்று, இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இது விளையாட்டு தனமான பொய்யான விளம்பரம் என கூறப்பட்டுள்ளது.

தன் பெயரை வெளியிட விருப்பாத ஒரு பெண் ஒருவர் தன் நண்பர்கள் இந்த காரியத்தை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ’30 வயதாகும்போது, ​​உங்கள் குடும்பமும், சமூகமும் திருமணம் செய்துகொண்டு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகின்றன. அப்படி கொடுக்கும் வகையில் என் பிறந்தநாளுக்காக என் நண்பர்கள் செய்த ப்ராங்க் தான் இந்த விளம்பரம்.

என் நண்பர்கள் பேப்பரில் விளம்பரத்தை கொடுத்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மற்றும் அந்த செய்தித்தாளை எனக்கு பரிசாக அளித்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து விட்டு பலர் என்னை திட்டியனுப்பினர்.

An advertisement English newspaper groom has gone viral

பொதுவாக ஆண்கள் எப்போதும் உயரமான, மெலிதான அழகான மணப்பெண்களை விரும்புகிறார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள சொத்துகள் குறித்து தற்பெருமை காட்டுகிறார்கள், ஆனால் அவர்களால் அதனை சாப்பிட முடியாது. பெண்கள் அவர்களை போல விரும்புவதாக விளையாட்டாக கூறினால் கூட அவர்கள் மீது தவறான கருத்துக்களை குற்றம் சாட்டுகின்றனர்’ என கூறியுள்ளார்.

இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us