27 பில்லியன் பவுண்டுகள் பவுன்ஸ் பேக் லோனை(bounce-back loans) ஆட்டையை போட்ட நபர்கள் திரும்ப வராது !

கொரோனா தொற்று முற்றியிருந்த கால கட்டத்தில், மீண்டும் தொழிலை ஆரம்பிக்க 50,000 ஆயிரம் பவுண்டுகளை பவுன்ஸ் பேக் லோனாக கொடுத்தது அரசு. இதனை பாவித்து பலர் மில்லியன் கணக்கில் சுருட்டி விட்டார்கள். இல்லாத பிசினஸை காட்டி, பலர் பணத்தை கொள்ளையடிக்க. மேலும் பூட்ட இருந்த பிசினஸை காட்டி மேலும் பலர் கொள்ளையடிக்க. கிடைத்த வரை லாபம் என்று பல லட்சம் பேர் இந்த பவுன்ஸ் பேக் லோனை எடுத்துவிட்டார்கள். தற்போது கணக்கு போட்டு பார்த்தால், 27 பில்லியன்(மில்லியன் அல்ல பில்லியன்) பவுண்டுகளை இவ்வாறு முறை கேடாக மக்கள் எடுத்துள்ளார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அரசால் திருப்பி வாங்கே முடியாது என்றும் கூறப்படுகிறது. Fraud and blunders in Covid support schemes has cost taxpayers more than £30bn… and more huge losses are to come, MPs warn.

இந்த நஷ்டத்தையும், டாக்ஸ் கட்டும் மக்களிடம் இருந்து தான் வசூலிக்க உள்ளது இந்த அரசு. அதாவது சாதாரண வேலை செய்து டாக்ஸ் கட்டி வரும் மக்கள் வரி பணத்தில் இருந்து தான் இந்த நஷ்டத்தை ஈடு செய்யப் போகிறதாம் பிரித்தானிய அரசு. பிரித்தானிய அரசின் கொள்கை அடிப்படையில், சுய தொழில்(Self-Employed) புரியும் நபர்கள், வருடத்திற்கு 50,000 ஆயிரம் பவுண்டுகளை சம்பாதித்தாலும், தமது செலவுகளை கழித்து மீதம் ஒரு 5,000 பவுண்டுகளே தமது லாபம் என்று கணக்கை காட்டி அதற்கு மட்டும் வரியை கட்டி தப்பி விடுவார்கள். ஆனால் கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளிகள் வருடம் 20,000 ஆயிரம் பவுண்டுகளை உழைத்தால் கூட. அந்த முழு காசுக்கும் 20% விகித வரியை கட்டித் தான் ஆகவேண்டும்.

ஆக மொத்தத்தில் தொழிலாளி அப்படியே சாகும் வரை நடுத் தர வர்கமாகவே உள்ளான். ஆனல் சுய தொழிலாளிகள் மேலும் மேலும் முன்னேறி பெரும் செல்வந்தராக இருக்கிறார்கள்.  இந்த சுய தொழிலாளிகள் செய்யும் திருட்டு வேலை, அவர்கள் அரசுக்கு ஏற்படுத்தும் நஷ்டத்தையும் ஈடு செய்யவேண்டும் சாதாரண தொழிலாளி. என்ன கொடுமை இது ?

Contact Us