போர் களத்தில் கிங் இந்த ராங்கிகள் தான் – தாக்க வரும் ஏவுகணைகளை நொடி பொழுதில் அழிக்க வல்லது !

பிரித்தானியா தனது படையில் இணைத்துள்ள ராங்கிகள், எதிரியின் ஏவுகணைகளை தாமாகவே குறிவைத்து தாக்கி அழித்து விடுகிறது. இதனால் இந்த ராங்கிகளை தாக்கி அதனை தகர்ப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன துப்பாக்கி ஒன்று, செக்கனுக்கு 22 குண்டுகளை ஏவ வல்லது. அந்த சுழல் துப்பாகி, பல குண்டுகளை ஏவுகணை வரும் பாதை நோக்கி சுடுவதால், ஏவுகணை செயல் இழந்து போகும். இல்லையேன் அது நடு வழியில் வெடித்து விடும்.

இது போன்ற அதி நவீன மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ராங்கிகளை பிரித்தானியா தனது படைகளில் இணைத்துள்ளது. தமக்கு வேண்டிய ராங்கிகளை தாமே தயாரிக்கும் பிரித்தானியா, அதில் பல நவீன கருவிகளை பொருத்தி, மேலும் வலுவூட்டி வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us