மனைவியை கொன்று சூட்கேசில் வைத்து எரித்த கணவன்.. கொடூர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியானது…

கையில் குழந்தை.. சாரணமாக சூட்கேஸ் எடுத்து செல்லும் காட்சி.. வழியில் பார்த்தவரிடமெல்லாம் அன்பாக பேசி சிரித்து செல்கின்றார்.. இதில் என்ன மர்மம் இருக்க போகிறது என்று தான் நினைத்திருப்போம் .ஆனால் மனைவியை கொன்று சடலத்தை அந்த சூட்கேசில் தான் ஸ்ரீகாந்த் ரெட்டி எடுத்து சென்றுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தற்போது வெளியாகியுள்ளது பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்தவர் சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்தரெட்டி, இவருக்கும் புவனேஷ்வரிக்கும் மூன்றான்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த தம்பதி குழந்தையுடன் திருப்பதியில் வீடெடுத்து அப்பார்ட்மென்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்த புவனேஷ்வரி கைநிறைய சம்பாதித்து வந்துள்ளார்.

ஆனால் சுயவிளம்பர பிரியரான ஸ்ரீகாந்த் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மனைவியின் பணத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவது, தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுத்து புகழ்தேடுவது என்று இருந்தவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்துள்ளார்.

அத்துடன் மேலும் நிகழ்ச்சி ஒன்று நடத்த அதிக பணம் வேண்டும் என்று புவனேஷ்வரியிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார் ஸ்ரீகாந்த. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு வாரமாக புவனேஷ்வரி, ஸ்ரீகாந்த் மற்றும் குழந்தை எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து புவனேஷ்வரியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணமல் போன முவரையும் ஆந்திர போலீசார் தேடி வந்தனர். அப்போது கடைசியாக ஸ்ரீகாந்த் குழந்தையுடன் ,பெரிய சூட்கேசுடன் வீட்டைவிட்டு செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

அத்துடன் திருப்பதி அரசு மருத்துவமனை அருகே ஒரு பெண்ணின் சடலம் எரிந்து கருகிய நிலையில் கிடந்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணையில் விஜயவாடா அருகே ஒரு லாட்ஜில் குழந்தையுடன் பதுங்கியிருந்த ஸ்ரீகாந்தை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும தகவல் கிடைத்துள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாந்திற்கும் , புவனேஷ்வரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த மனைவியை வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து புவனேஷ்வரியின் தலையில் அடித்தும் ,கழுத்தை நெரித்தும் கொடுரமாக கொலை செய்துள்ளார்.

வீட்டில் சடலமாக கிடந்த புவனேஷ்வரியை என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீகாந்த் கடைக்கு சென்று பெரிய அளவிலான சூட்கேஸ் ஒன்றை வாங்கி வந்துள்ளார். மனைவியின் சடலத்தை கை , கால்களை கட்டி சூட்கேசில் வைத்து குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு சூட்கேஷை இழுத்து சென்றுள்ளார்.

அப்போது வழியில் பார்த்தவர்களிட்ம் எல்லாம் ஊருக்கு செல்வதாகவும் அதனால் அதிக தூணிகளை எடுத்து செல்வதாகவும் சாதாரணமாக பேசி சென்றுள்ளார் ஸ்ரீகாந்த் காரில் சூட்கேசில் சடலத்தை ஏற்றிச் சென்றவர் திருப்பதி அரசு மருத்துவமனை அருகே சடலத்தை தீ வைத்து கொழுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைவழக்கில் ஸ்ரீகாந்தை கைது செய்த திருப்பதி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக சேவகராக தன்னை காட்டிக்கொண்டவர் மனைவியை அடித்துக்கொன்று தீவைத்து கொழுத்திய சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us