இனப்படுகொலை செய்த மஹிந்தவின் மனைவி மடுவிற்கு வருகிறார்; தேசியத்தை விற்று பிழைக்கும் கிறிஸ்தவ பாவாடைகள்!

கிறிஸ்தவ விவசாயிகளுக்கும் பங்குத்தந்தைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டை காணி விவகாரத்தில் குறித்த காணியை விவசாயிகளுக்கு பிரித்து வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய காணி ஆணையாளரால் மன்னார் மாவட்ட செயலருக்கு பிரதியிட்டு மடு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த கடிதத்திற்கு அமைய மடு பிரதேச செயலாளர் காணிகளை பிரித்து விவசாயிகளுக்கு வழங்காமல் தன்னை பதவிக்கு கொண்டு வந்தவர்களின் காரணத்திற்கு விசுவாசமாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்க வடக்கு மாகாண காணி ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய இன்று வரை காணியை பிரித்து கொடுக்காமல் பல காரணங்களை முன்வைத்து 40 நாட்களுக்கு மேலாக செயற்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் விவசாயிகளினால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஆடி 2-ம் திகதி மடு தேவாலயத்தின் ஆடிபெருமாள் இடம்பெறவிருக்கின்ற நிலையில் குறித்த பெருநாளுக்கு பிரதம விருந்தினராக இலங்கை பிரதமரின் பாதிரியார் ஷிராணி ராஜபக்ஷ அவர்களை மடு பரிபாலகர் பெப்பிசோசையின் தலைமையில் அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்ட கோயில்மோட்டைக்காணிகளை ரத்து செய்து தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் தேசியம், சுயநிர்ணயம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டுமென்ற போராட்டங்களில் கலந்துகொண்டு தங்களை தேசியவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கும் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவ விவசாயிகளுக்கும் தங்களுக்குமான பிரச்சினைக்காக இனப்படுகொலை செய்தார் என இவர்கள் சொல்லும் தற்போதைய பிரதமரின் பாதிரியாரை அழைத்து தங்கள் காணிப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சிப்பது இவர்களின் தேசிய உணர்வின் இரட்டை வேடத்தை புரியவைக்கிறது என சொல்லப்படுகிறது.

Contact Us