இது அவங்களா இருக்குமோ..? தலையில்லாமல் கிடந்த சடலம்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் இங்கிலாந்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான சால்கோம்பில் காட்டு பகுதியில் உள்ள பிரதான சாலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களில் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெவோன் காவல்துறையினர் அந்த பெண்ணுடைய சடலத்தை மீட்டதோடு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக திரளான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பு சம்பவம் காரணமாக Bennett சாலையின் இருபுறமும் மூடப்பட்டதால் சுற்றுலா வாசிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையே காவல்துறையினர் சடலமாக கிடந்த அந்த பெண் 1972-ஆம் ஆண்டு மாயமான Patricia Allen-ஆக இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மூத்த காவல் அதிகாரி ஒருவர் அது 100 சதவீதம் Patricia இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

 

Contact Us