மகாராணியை சந்திக்கப்போகும் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்.. எதற்காக..? தெரியுமா ?

ஜெர்மன் சான்சலர் பதவியிலிருந்து ஏஞ்சலா மெர்கல் ஓய்வு பெற இருக்கிறார். எனவே பிற நாட்டு தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் விடை பெற்று வருகிறார். எனினும் பிரிட்டன் மகாராணியை அவர் சந்திப்பதற்கு இதுதான் காரணம் என்று சரியாக தெரிவிக்கப்படவில்லை. முதலில் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்திற்கு சென்று, அவரை சந்திக்கவுள்ளார்.

அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, செல்லும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளை  தனிமைப்படுத்த வேண்டாம் என்று பிரிட்டன் கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் யூரோ கால்பந்து போட்டியானது, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் Wembley மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியதற்கு, டெல்டா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும் என்று ஏஞ்சலா எதிர்த்தார்.

மேலும், வட அயர்லாந்திற்கு, குளிரூட்டப்பட்ட இறைச்சிகளை இங்கிலாந்திலிருந்து அனுப்புவது தொடர்பில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பில் ஏஞ்சலா பிரதமருடன் கலந்து ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரை சந்தித்த பின்பு வின்ஸ்டர் மாளிகைக்கு சென்று மகாராணியாரை ஏஞ்சலா சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us