ஆன்லைன் வகுப்பில் பெண்ணுடன் செக்ஸ் வைத்த மாணவர்.. அதிர்ச்சியில் உறைந்த பேராசிரியர், சக மாணவர்கள்.!

ஆன்லைன் முறையில் பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, வீடியோ ஆந்ல் இருப்பதை தெரியாமல் மாணவர் ஒருவர், பெண் ஒருவருடன் செக்ஸில் ஈடுபட்டது பேராசிரியர் மற்றும் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் முறையிலேயே கல்வி கற்று வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இன்னமும் குறையாததால் பல நாடுகளிலும் ஆன்லைன் கல்வி முறையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்று வருவதால் சில நேரங்களில் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாப்பிடுவது, தூங்குவது, அல்லது வேறு ஏதேனும் விநோத வேலைகளில் ஈடுபட்டு அது கேமரா வழியாக பிறரின் கவனத்துக்கு சென்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

ஆனால் இது எல்லாவற்றிற்கும் உச்சகட்டமான செயலை மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது ஈடுபட்டு வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது பெண் ஒருவருடன் செக்ஸில் ஈடுபட்டுள்ளார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய மொபைலில் வீடியோவை ஆஃப் செய்யாமல் அவர் பெண்ணுடன் செக்ஸில் ஈடுபட்டதால் பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் மற்றும் சக மாணவ, மாணவிகள், மாணவரின் செயலால் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் மாணவர் தனது செயலில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கொண்டிருந்தார். பேராசிரியர் எச்சரித்த போது தான் மாணவருக்கு தன்னை எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதே புரிந்தது. சுதாரித்துக் கொண்ட மாணவர் பதற்றத்தில் தனது ஆடைகளை எடுத்து போட்டிருக்கிறார்.

தற்போது மாணவரின் செயல் குறித்த சிறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்று பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மாணவரின் செயலை கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், தனது செயலுக்காக மாணவர் பேராசிரியர், சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவரின் செக்ஸ் வீடியோ பரவியதை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.

Contact Us