ஆஸ்திரேலியாவின் நல்லெண்ணம்: இதுதான்டா நாடு; நெகிழ்ச்சி சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவர் உயிருக்கு ஆபத்தான கிட்னி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை தனி விமானத்தில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா. இந்த நல்லெண்ணச் செயல் மீது அந்த நாட்டின் மீது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அர்ஷ்தீப் சிங் என்ற இந்த மாணவர் ஆஸ்திரேலியாவில் படித்து வந்தார். இவரருக்கு உயிரைப்பறிக்கும் கிட்னி நோய் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது.

இந்நிலையில் இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஆஸ்திரேலிய அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இந்த விமானத்தில் சிறப்பு மருத்துவ உதவி உபகரணங்கள் உள்ளன. இந்திய உலக அமைப்பும் இந்த மாணவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தது.

இன்று மாலை 6:10 மணியளவில் அர்ஷ்தீப் சிங் இந்தியா வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. புதுடெல்லியில் அவர் வந்திறங்கியவுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இவரை அவரது குடும்பத்தினரும் சீக்கியத் தலைவர் மஞ்சித் சிங்கும் பிற அதிகாரிகளும் புதுடெல்லி விமான நிலையத்தில் வரவேற்பார்கள்.

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்திலிருந்து குவாண்டாஸின் 111-ம் எண் தனி விமானத்தில் அர்ஷ்தீப் சிங் வருகிறார்.

25 வயதாகும் அர்ஷ்தீப் சிங் மெல்போர்னில் தங்கியிருந்தார், இந்நிலையில் அவருக்கு உயிரைப்பறிக்கும் கிட்னி நோய் இருப்பது தெரியவந்தது. நீண்ட நாள் இவர் இதனால் அவதிப்பட்டு வந்துள்ளார், இப்போது ஆஸ்திரேலியாவில் நல்லெண்ணச் செய்கையினால் இந்தியாவுக்கு தனி விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளார்.

Contact Us