தலீபான் பயங்கரவாதிகளுடன் மோதல்; ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 1,000 பேர் தஜிகிஸ்தானில் தஞ்சம்!

வெளிநாட்டுப்படைகளின் வெளியேற்றத்தின் போதும், அதற்கு பிறகும் ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைத்துக் கொள்வோம் என தலீபான்கள் அந்த ஒப்பந்தத்தில் உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக தலீபான் பயங்கரவாதிகள் கடந்த சில வாரங்களாக அரசு படைகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் 10-ல் 3 பங்கு இடத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலீபான்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மேலும் சில பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். குறிப்பாக, தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு வெகு அருகே உள்ள படாக்ஸ்கான், தக்கார் ஆகிய மாகாணங்களில் தலீபான்கள் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.இந்த நிலையில் படாக்ஸ்கான் மற்றும் தக்கார் மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் உடனான மோதலில் ஈடுபடும் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனை தஜிகிஸ்தான் எல்லைக் காவல்படை உறுதிப்படுத்தி இருக்கிறது.

Contact Us