அண்ணனின் பதவியை பறித்த தம்பி பஷில்; சற்றுமுன் தென்னிலங்கையில் பரபரப்பு!

தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதற்கமைய நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Contact Us