அலிபாபா உட்பட 22 சீன நிறுவனங்களுக்கு ஆப்பு; இதென்ன நாடுடா இது!

சீனாவில் அலிபாபா உட்பட 22 சீன நிறுவனங்களுக்கு தலா 75,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சந்தை கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்கள் தமது வணிகத்தை பெருக்குவதற்காக சந்தையை நியாயமற்ற முறையில் கையாளுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்தே இந்த அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அலிபாபா நிறுவனத்துக்கு சொந்தமான இணையத்தள சேவை மற்றும் பொருட்களை விநியோகிக்கும் 6 நிறுவனங்களும் டென்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்களும் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள 22 நிறுவனங்களுக்குள் உள்ளடங்குகின்றன.

Contact Us