ஜனாதிபதி உரையில் மக்ரோன் அறிவிக்கப்போவது என்ன..?

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் திங்கட்கிழமை தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.  ஜனாதிபதியின் உரையில், அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்க உள்ளது என்ன..?
பிரதானமாக கொவிட் 19 சூழ்நிலைகள் குறித்தே மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது கொவிட் 19 தொற்று பரவல் அதிகமாகி வருவதை அடுத்து, புதிய கட்டுப்பாடுகளை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  அதேபோன்று மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமான மருத்துவ துறையினருக்கான தடுப்பூசி போடுவது குறித்தும் ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூன் 9 ஆம் திகதியில் இருந்து நடைமுறையில் இருக்கும் சுகாதார அனுமதி சிட்டை (pass sanitaire) தொடர்பான மேலதிக பயன்பாடுகள் குறித்தும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்தோடு தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான பிரச்சாரமாகவும் இந்த உரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உரைக்கு முன்பாக எலிசே மாளிகையில் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுகூடுகின்றது. அதில் கலந்தாலோசித்து எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே  ஜனாதிபதியின் உரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us