1966 வென்ற பிரிட்டன் இன்று 55 வருடங்கள் பின்னர் வெல்லுமா ? மாலை களோபரமாக மாறவுள்ள லண்டன்: மகாராணி வாழ்த்து !

இன்று மாலை நடைபெறவுள்ள யூரோ கிண்ண உதைபந்தாட்ட போட்டியில், இறுதியாக இத்தாலி மற்றும் பிரித்தானியா மோதவுள்ள நிலையில். இலக்கம் 10 டவுனிங் வீதியில் இருந்து பிரதமர் உத்தியோகபூர்வமாக வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். இதேவேளை 1966ம் ஆண்டு இந்த கிண்ணத்தை பிரித்தானியா வென்றவேளை, 55 வருடங்களுக்கு முன்னர், மகாராணியார் எலிசபெத் அவர்கள் அன்றைய கேப்டனுக்கு விருது ஒன்றை வழங்கி இருந்தார். இன்று வின்சர் காசில்(மகாராணி வசிக்கும் ஸ்தலம்) த்தில் இருந்து பிரித்தானிய உதைபந்தாட்ட வீரர்களுக்கு உத்தியோகபூர்வ வாழ்த்துச் செய்தி ஒன்று கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மகாராணியார்…. நான்…

55 வருடங்களுக்கு முன்னர் இந்த வெற்றியை கொண்டாடும் பாக்கியத்தை பெற்றேன் என்று எழுதி உள்ளார். அதே போல இன்றும் நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை சுமார் 35 மில்லியன் மக்கள் பார்வையிட உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது பிரித்தானியாவின் முழு மக்கள் தொகையில் பாதிக்கு மேல் என்பது மிகவும் ஆச்சரியமான விடையம். இன்று பிரித்தானியா வெற்றியடைந்தால் போதும், பெரும் களோபரமாக நாடே மாறும் என்பதில் ஐயமில்லை.

Contact Us