கனவுகள் முடிந்தது: பிரித்தானியாவே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது: வென்ற இத்தாலி …

மிகவும் வாடிய முகத்தோடு பிரித்தானிய வீரர்கள் மற்றும் கேப்டன் ஆகியோர் தமது தங்கும் விடுதிக்கு அதிகாலை சென்றடைந்துள்ளார்கள். இன்று அவர்கள் தமது வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடந்த இறுதிப் போட்டியில், இத்தால் 1 கோல், பிரித்தானியா 1 கோல் என்ற நிலையில் இருந்தார்கள். இறுதியாக பெனால்டி வழங்கப்பட்டது. இதில் பிரித்தானியாவை சேர்ந்த மார்கஸ் ரஷ்பேட் முதலில் சொதப்பி விட்டார். அவர் அடித்த பந்தை கோலி தடுத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியெ சென்று விட்டது. எல்லாமே பதற்றம் தான் காரணம். அதிக பதற்றம்….

இது இவ்வாறு இருக்க ஒரு கட்டத்தில் இத்தாலி அடித்த பெனால்டி ஒன்றை, பிரித்தானிய கோலி தடுத்தார். இதனால் பிரித்தானியா வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால் மேற் கொண்டு பிரித்தானிய வீரர் சாகா அடித்த பந்தை இத்தாலி தடுத்தது. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. பிரித்தானிய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் பெனால்டி ஷாட் என்று வந்தால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்ச்சி காணாது. பெனால்டி அடிப்பதில் மிக மிக வல்லவர்களாக இருப்பது இத்தாலி தான்.

இதன் காரணத்தால் தான் பிரித்தானியா நேற்றைய தினம் யூரோ கிண்ணத்தை இழந்தது என்பது உறுதி.

 

Contact Us