நடிகர் விஜய்யின் வண்டவாளம் கிழிந்தது; வெளிவரும் உண்மைகள்!

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

actor vijay fined for tax evasion madras high court condemns

2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்ததுடன், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த அபராதத் தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்க அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது; வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என அறிவுறுத்தியது.

Contact Us