பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு 24 மணிநேரத்துக்குட்பட்ட PCR கட்டாயம்!!

பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வருவோர், 24 மணிநேரத்துக்குட்பட்ட PCR (எதிர்மறை முடிவுகளுடன் கூடிய) முடிவுகளுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐரோப்பிய விவகாரங்களுக்கான மாநில செயலாளர் Clément Beaune இத்தகவலை அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ‘செம்மஞ்சள்’ நிறத்தில் பிரித்தானியா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், சுகாதார பாஸ் இல்லாதவர்கள் கடந்த 24 மணிநேரத்துக்கு உட்பட்ட PCR முடிவுகளுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக 72 மணிநேரங்களுக்கு உட்பட்ட PCR முடிவுகள் கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது, இந்த கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us