இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை

 

உலகின் மிக கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம். சமீபத்தில் பாகிஸ்தானில் இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் நாட்டின் மூத்த வழக்கறிஞர் மிர்சா அக்தர் அலி என்பவர் வாக்கிங் செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஹூமாயூன் கான் என்பவருக்கு சொந்தமான 2 ஜெர்மன் செப்பர்டு நாய்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் மிர்சா அக்தர் அலியை தாக்கியது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து அந்த நாய்களை உரிமையாளர் ஹூமாயூன் கான் மீது வழக்கு தொடர மிர்சா அக்தர் அலி முடிவு செய்தார். அதன் பின் ஹூமாயூன் சமாதானம் பேச சென்றார். அதன் பின் வழக்கு தொடரும் முடிவை நிபந்தனையின் பேரில் வழக்கறிஞர் மிர்சா அக்தர் அலி வாபஸ் பெற்றார்.

என்ன நிபந்தனை என்றால் தனக்கு அவரது நாய்கள் தாக்கியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேல் அவர் ஆபத்தான கொடூரான மிருகங்களை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க கூடாது.

இந்த இரண்டு நாய்களையும் உடனடியாக கொல்லல வேண்டும். என்பது தான் அந்த நிபந்தனை அதை ஹூமாயூனும் ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கு தொடரப்படவில்லை. ஆனால் இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. நாய்களை கொலை செய்ய ஒப்பந்தம் போட முடியாது என பலர் பேசி ஆரம்பித்துள்னளர்.

Contact Us