கள்ளக்காதலனா? கணவனா? சித்ரா யாரை கொன்றிருப்பார்?

 

தாராபுரம் அருகே கள்ளக் காதலனை கணவனுடன் சேர்ந்து அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்து விட்டு, திருஷ்யம் பட பாணியில் போலீசை திசை திருப்ப முயன்ற சூப்பர் குடும்பம் ஒன்று 8 மாதங்களுக்கு பின் வசமாக சிக்கியது. திருப்பூர் மாவட்டம் காதபுள்ளபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். 3 ஆண்டுகளுக்கு முன் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த இவர், அதே தோட்டத்தில் களையெடுக்கும் பணியில் இருந்த சித்ரா என்ற திருமணமான பெண்ணின் மனதை திருடி, மன்மத பாடம் பழகி வந்துள்ளார்.

கணவன் காத்திருப்பு பட்டியலில் இருக்க, மனைவி, மணிகண்டனுடன் மகரந்த சேர்க்கை நடத்திய விஷயம், கொழுந்தனாரின் காதுக்கு வர, அவர் சந்தர்ப்பம் பார்த்து சகோதரரிடம் கொளுத்தி போட்டுள்ளார். இதையடுத்து முக்கோண காதல் கதை முடிவுக்கு வர தயாரானது.  கள்ளக் காதலனா..? கணவனா..? என்று யோசிக்கத் தொடங்கிய சித்ரா, கணவனிடம் தன்னை நிரூபிக்க கொழுந்தனார் உடன் சேர்ந்து கள்ளக் காதலனை அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளார்.

மணிகண்டனை காணவில்லை என அவரது உறவினர்கள் போலீசில் அளித்த புகாரின் பேரில் தோட்டத்திற்கு விரைந்த காவல்துறை, தோட்ட உரிமையாளர் பாலசுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் தனது தோட்டத்தில் எடுக்கப்பட்ட பாபநாசம் படத்தின் பார்ட் 2 குறித்து.. பாவம் அவர் ஏதும் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில் சித்ராவும் அவரது கணவரும் பேச்சு வாக்கில் மணிகண்டன் அத்தியாயத்தை பாலசுப்ரமணியத்திடம் உலறி கொட்ட, 8 மாதங்களுக்கு பிறகு மணிகண்டன் வழக்கு தூசி தட்டப்பட்டு பச்சை தோட்டத்தில் காக்கி சட்டைகள் மீண்டும் களமிறங்க தொடங்கின.

கடந்த விசாரணையின் போது சிறு குழந்தை போல பாவணை செய்த சித்ரா அண்ட் கோ, தற்போது வேறு வழியின்றி போலீசில் சரணடைந்தது.

புதைக்கப்பட்ட இடத்தை சூப்பர் குடும்பம் அடையாளம் காட்ட, சடலமாக புதைக்கப்பட்ட மணிகண்டன் எலும்பு கூடுகளாக தோண்டி எடுக்கப்பட்டார்.

பரிசோதனையில் கொலையை உறுதி செய்த போலீசார் சித்ரா, அவரது கணவர் மற்றும் கொழுந்தனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சந்தேகம் வராமல் இருக்க சடலத்தை வேலை செய்யும் தோட்டத்திலேயே புதைத்த திரிஷ்யம் பேமிலியின் செயல் அப்பகுதி வாசிகளை திகைக்க செய்துள்ளது.

Contact Us