ஏங்க இவ்ளோ ‘கம்மியா’ சம்பாதிக்குறீங்க…? அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணுனீங்க…? ‘நச்சரித்துக் கொண்டிருந்த மனைவி…’ – மனைவியின் தேவையை நிறைவேற்ற கணவன் போட்ட பிளான்…!

திருமணம் ஆகி கொஞ்சம் நாளே ஆன நிலையில், வருமானம் போதவில்லை என மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்ததால் கணவர் செயின் திருடராக மாறியுள்ளார்.

pune husband Chain thief to fulfill wife\'s financial need

புனேவை சேர்ந்தவர் சவுரப் யாதவ் (20). தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். சவுரப் யாதவின் சொற்ப வருமானத்தில் தன்னுடைய மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக தினமும் சவுரப் யாத்வுடன் ஏன் இவ்வளவு குறைவாக சம்பாதிக்கிறீர்கள், இப்படி என்னை துன்பப்படுத்தவா திருமணம் செய்து கொண்டீர்கள் என கூறி நச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் வகாட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சவுரப் யாதவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது பைக்கையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 121 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விசாரித்ததில், புனே சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு இடங்களில் செயின் பருப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

செயின் பறிப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தபின்னர், யூடியூப்பில் வரும் செயின் பறிப்பு காணொலிகள் அனைத்தையும் பார்த்துள்ளார். அதில் கிடைத்த ஐடியாவைக் கொண்டு ஒவ்வொரு சம்பவமாக அரங்கேற்றியுள்ளார். மனைவியின் தேவையை குறுக்கு வழியில் நிறைவேற்ற நினைத்த கணவன் இப்போது ஜெயிலில் உள்ளார்.

Contact Us