லண்டனில் வீட்டில் இதை வைத்திருந்தால் கேட்டுக் கேள்வி இன்றி தண்டனை கிடைக்கும்- பொலிசார் !

பிரித்தானிய நாட்டில் அச்சமூட்டும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக புதிய தாக்குதல் ஆயுத சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே குற்றவியல் நீதி சட்டம் 1988 இன் கீழ் பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிப்பட்ட முறையில் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் வீடுகளில் ஜாம்பீ கத்திகள், நக்கில் டஸ்டர்கள், ஷுரிகென் போன்ற ஆயுதங்களையும் துப்பாக்கி மற்றும் சூறாவளி கத்திகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதும் சட்டவிரோத குற்றமாகும்.

மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதனை அடுத்து மற்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு அபாரதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும். இந்த புதிய சட்டம் குறித்து உள்துறை செயலாளர் பிரதி படேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இந்த பயங்கரமான ஆயுதங்களை தடை செய்வதன் மூலம் பல்வேறு இடங்களில் நடக்கும் வன்முறைகளை தவிர்க்கவும் மேலும் பல உயிர்களை காப்பாற்றவும் முடியும் என கூறியுள்ளார். மேலும் இந்த ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றை சட்ட விரோதமாக வைத்திருப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Contact Us