தெளிவாக குட்டையைக் குழப்பும் பிரித்தானியா… அரசு ஒன்றை சொல்ல நிறுவங்கள் ஒன்றை சொல்லி மக்களை குழப்பி..

பிரித்தானியா அரசு வரும் 19ம் திகதியை, சுதந்திர தினமாக அறிவித்து, அன்று முதல் பல தடைகளை விலக்கி கொள்ள உள்ளது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தமக்கு என்று ஒரு விதி முறைகளை உருவாக்கி உள்ளது. உதாரணமாக ஜூலை 19ம் திகதியோடு முக கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஆனால் ரயில் கட்டுப்பாட்டு வாரியம், ரயிலில் பயணிப்பவர்கள் முக கவசம் போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளது. இது போக வைத்தியசாலை வட்டாரங்கள் முக கவசம் அணிய வேண்டும் என்கிறது. மேலும் சொல்லப் போனால் சூப்பர் மார்கெட் அனைத்துமே முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் குழப்பிப் போய் உள்ளார்கள்… அரசு ஒன்றை தெரிவிக்க…

தனியார் நிறுவங்கள் ஒரு கட்டுப்பாட்டை புதிதாக புகுத்தி வருகிறது. இதனால் என்ன செய்ய முடியும், எதனை செய்ய முடியாது என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

Contact Us