25 ஆண்டு பழம்பெரும் நிறுவனம்’!.. மிகப்பெரிய விலைக்கு ‘பிரபல’ கம்பெனியை வாங்கப்போகும் அம்பானி? பேச்சுவார்த்தை தீவிரம்..!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிரபல நிறுவனம் ஒன்றை பெரிய விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Reliance in advance talks to buy Justdial

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம், பிரபல ‘ஜஸ்ட் டயல்’ (Just Dial) நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகளை 900 மில்லியன் டாலருக்கு (6,660 கோடி ரூபாய்) வாங்க திட்டமிட்டுள்ளதாக The Economic Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Reliance in advance talks to buy Justdial

Reliance in advance talks to buy Justdial

வரும் ஜூலை 16-ம் தேதி Just Dial நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தை விற்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Reliance in advance talks to buy Justdial

தற்போது இந்த நிறுவனப் பங்கு 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா குழுமம் Just Dial நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

Reliance in advance talks to buy Justdial

கடந்த 1996-ம் ஆண்டு வி.எஸ்.எஸ் மணி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், இவரது குடும்பத்தின் வசம் 35.5 சதவீத பங்குகள் உள்ளன. இவர் வசம் உள்ள பங்குகளில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிறகு, ஓபன் ஆஃபர் மூலம் 26 சதவீத பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மொத்தம் 60 சதவீத பங்குகளை கையகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் நிறுவனர் வி.எஸ்.எஸ் மணி, Just Dial நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காக தொடர்வார் என்றும் சொல்லப்படுகிறது.

Contact Us