பக்கவாதத்தால் முடங்கிய மனிதரின் மூளை அலைகளின் வழியே தகவல் தொடர்பை உருவாக்கும் சாதனம்!

மருத்துவத் துறையிலேயே முதன் முறையாக மூளை அலைகளை வாக்கியங்களாக மாற்றும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கை கால்கள் செயலிழந்து முடங்கிய நிலையில் இருக்கும் ஒரு நபரின் மூளை அலைகளை, அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை, வாக்கியங்களாக மாற்றி, கணினித்திரையில் தோன்றுமாறு ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிவதற்கு இன்னம் சில வருடங்கள் தேவைப்படும். ஆனால், விபத்து அல்லது நோய் காரணமாக பேச முடியாத நிலையில் இருக்கும் நபர்களுக்கு, இயற்கையான தகவல்தொடர்பு முறைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக இது உருவாகியுள்ளது என்று புதன்கிழமை வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.

நாம் பேசுவதின் வழியே எவ்வளவு சுலபமாக ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்கிறோம் என்பதை நம்மில் பெரும்பாலோர் மிகவும் வேடிக்கையாக எடுத்துக்கொள்கிறோம் என்று இந்த ஆய்வுக்கு தலைமை வகிக்கும் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எட்வர்ட் சாங் கூறினார். ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று நினைக்கும் போதே உற்சாகமாக இருக்கிறது என்றும், பேசும் திறனை இழந்தவர்களுக்கு, புதிய நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்த களம் இருக்கும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இன்று, பக்கவாதம் காரணமாக பேசவோ எழுதவோ முடியாதவர்கள் தொடர்புகொள்வதற்கான வழிகள் மிகக் மிகக் குறைவு. எடுத்துக்காட்டாக, தற்போது சோதனையில் உள்ள நபர், தனது தனியுரிமையைப் பாதுகாக்க அடையாளம் வெளிக்காட்டாதவர், பேஸ்பால் தொப்பியுடன் இணைக்கப்பட்ட ஒரு சுட்டிக்காட்டி (பாயின்ட்டர்) பயன்படுத்துகிறார். தலையை நகர்த்தும் போது, திரையில் சொற்களையோ அல்லது எழுத்துக்களையோ தொடு முடியும். இதன் மூலம் அவர் என்ன சொல்கிறார் என்பதை வெளிப்படுத்த முடியும்.

பிற சாதனங்கள், நோயாளிகளின் கண் அசைவுகளை டிராக் செய்து என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை கண்டறிய உதவலாம். ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தும் விரைவான தகவல்தொடர்புக்கு உதவாது. அது மட்டுமின்றி, பேச்சுக்கு மாற்றாக இந்த முறைகள் பயனளிக்காது.

உடல் ரீதியான இயலாமை காரணமாக, மூளை சமிக்ஞைகளை டிராக் செய்வது என்பதே ஒரு புதிய, நம்பிக்கையூட்டும் ஆய்வுக்களம். சமீபத்திய ஆண்டுகளில், மூளையைக் கட்டுப்படுத்தும் புராஸ்தெட்டிக்ஸ் பரிசோதனைகள், பக்கவாதம் அல்லது விபத்து மூலம் முடங்கிப்போனவர்களுக்கு கைகுலுக்கவோ அல்லது ரோபோ கையைப் பயன்படுத்தி பானம் போன்றவற்றை எடுக்கவோ அனுமதித்தன – இந்த சோதனையில் பங்கேற்றவர்கள், தங்கள் கைகள் நகர்வதை போல கற்பனை செய்யும் போது, அந்த மூளை சமிக்ஞைகள் டிராக் செய்யப்பட்டு, கணினி வழியாக செயற்கை கைக்கு தெரிவிக்கப்பட்டு, கைகள் இயங்குகின்றன.

சாங் குழுவினர், ஸ்பீச் நியூரோபிராஸ்த்தெட்டிக் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர் – இந்த சாதனம், வோக்கல் டிராக்ட், இதழ்களின் சிறிய தசை அசைவுகள், தாடை, நாக்கு மற்றும் ஒவ்வொரு உயிர் மற்றும் மெய் எழுத்தின் உருவாக்கும் லாரின்க்ஸ் (குரல்வளை) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மூளை அலைகளை டீகோட் செய்கிறது.

சாதனத்தை சோதித்துப் பார்க்க, 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபர் தன்னார்வத்துடன் வந்துள்ளார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு மூளை-தண்டுவடம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இந்த பாதிப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தி மற்றும் பேசும் திறனை இழக்க வைத்தது.

ஆராய்ச்சியாளர்கள் அந்த நபருடைய மூளையின் மேற்பரப்பில், பேச்சைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு மேலே எலக்ட்ரோடுகளைப் பொருத்தினர்.

தண்ணீர் அல்லது நல்லது போன்ற சில பொதுவான சொற்களைச் அவர் சொல்ல முயன்றபோது, கணினி அதன் வடிவங்களை ஆராய்ந்தது. முயற்சியின் பலனாக, 1,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு வாக்கியங்களை உருவாக்கக் கூடிய, 50 சொற்களின் வேறுபாடுகளை அறிய முடிந்தது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நலமாக இருக்கிறீர்களா அல்லது உங்களுக்கு தாகமாக இருக்கிறதா போன்ற கேள்விகளை உள்ளடங்கியுள்ளது. இந்த சாதனத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட நபரால், நான் நலமாக இருக்கிறேன், எனக்கு தாகமில்லை என்று பதிலளிக்க முடிந்தது – இந்த பதில்கள் அவர் குரல் மூலம் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அவரின் மறுமொழியை டெக்ஸ்ட் செய்தியாக சாதனம் மாற்றுகிறது என்று, ஆய்வுக் குழு, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

 

அந்த நபர் ஒரு சொல்லை கூற முயற்சித்த பின், திரையில் அந்த வார்த்தை தோன்ற மூன்று அல்லது நான்கு நொடிகள் ஆகும் என்று கூறினார், சாங்ஸ் ஆய்வகத்தின் பொறியியலாளராக இருக்கும் முன்னணி எழுத்தாளர் டேவிட் மோசஸ். இது பேசுவதைப் போல அவ்வளவு வேகமாக இருக்காது, ஆனால் பதிலைத் தட்டுவதை விட விரைவானது.

இந்த செய்தியுடன் தொடர்புடைய ஒரு கட்டுரையில், ஹார்வர்ட் நரம்பியல் நிபுணர்கள் லேய் ஹோச்பெர்க் மற்றும் சிட்னி கேஷ் ஆகியோர் இந்த ஆய்வுப்பணி ஒரு முன்னோடியாக விளங்குகிறது என்று கூறினார்.

 

அவர்கள் சில கூடுதல் மேம்பாடுகளை பரிந்துரைத்தனர். ஆனால் அதே நேரத்தில், இதிலிருக்கும் சிக்கல்களையும் கூறினார்கள். விபத்துகள், பக்கவாதம் அல்லது லூ கெஹ்ரிக்ஸ் நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வகையான சாதனம் உதவ முடியும். ஆனால், இவற்றிலிருந்து தொழில்நுட்பம் வெளியேறினால், பாதிக்கப்பட்டவர்களின் மூளை வெளிப்படுத்த விரும்பும் செய்திகளைத் தயாரித்தாலும், ஆனால் அந்த செய்திகள் மூலையிலே சிக்கிக் கொள்கிறது.

பேச்சுக்கு வழிவகுக்கும் மூளையின் செயல்பாட்டை மேப்பிங் செய்யும் ஆராய்ச்சியில், சாங்ஸ் ஆய்வகம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது. முதலாவதாக, வலிப்புக்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர்களின் மூளையில் ஆராய்ச்சியாளர்கள் தற்காலிகமாக எலக்ட்ரோடுகளை வைத்தனர், எனவே என்ன வார்த்தைகள் பேசப்படுகின்றனவோ, அதனுடன் மூளையின் செயல்பாட்டை எளிதாக பொருத்த முடியும்.

Youtube Video

அப்போதுதான் பேச முடியாத ஒருவருடன் பரிசோதனையை முயற்சிக்க வேண்டிய நேரம் வந்தது. சாதனம் அவரின் வார்த்தைகளை சரியாக விளக்கியது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்று இருக்கும் வாக்கியங்களை, சாதனம் மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தியது. எனவே, அதைப் போன்ற வாக்கியங்களைத் தவிர்த்து, ப்ளீஸ், என் கண்ணாடியைக் கொண்டு வாருங்கள் போன்ற சில குறிப்பிட்ட வாக்கியங்களை சொல்ல முயற்சிப்பதன் மூலம், சோதனை தொடங்கியது.

அடுத்த படிகளில் சாதனங்களின் வேகம், துல்லியம் மற்றும் சொல்லகராதியின் அளவை மேம்படுத்துவதற்கான செயல்முறைகள் அடங்கும். மேலும், குறைந்த எண்ணிக்கையிலான கூடுதல் தன்னார்வலர்களைச் சோதிக்கும் போது, அவர்களின் மூளை அலைகளை, திரையில் செய்தியாக காட்டுவதை விட, கணினி உருவாக்கிய குரல் மூலம் செய்தியை தெரிவிக்க வைக்கும் அளவுக்கு ஆய்வுகள் முன்னேறும்.

அசோசியேட்டட் பிரஸ் ஹெல்த் அண்ட் சயின்ஸ் துறை, ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனங்களின் அறிவியல் கல்வித் துறையின் ஆதரவைப் பெற்றுள்ளது. எல்லா உள்ளடக்கங்களுக்கும் AP மட்டுமே பொறுப்பு.

Contact Us