மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக தலைவர்; என்ன கொடுமைடா!

தஞ்சாவூர் அடுத்த மாரியம்மன் கோவில், வெள்ளாளசெட்டித் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனியார் பேட்டரி கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளார். இவருடைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் . அதே பள்ளியில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான மற்றொரு மாணவியும் படித்து வந்துள்ளார் . இந்நிலையில் வேல்முருகன் அவருடைய மகளின் தோழிக்கு அவர் மகள் அனுப்புவதை போல தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் குறுந்கவல்கள் அனுப்பி வந்துள்ளார்.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது மாணவியின் பாட்டி வீட்டிற்குள் வர அவர் வெளியே சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து மாணவிக்கு வேல்முருகன் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சென்றுள்ளார்.

நட்சத்திரங்களைத் துரத்தும் வரி சர்ச்சைகள்-பிரச்சனை எங்கே? தீர்வு என்ன?

அங்கிருந்தவாறு தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Contact Us